தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் வேகம் கட்டி வருகிறது. ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவது, ஒருபக்கம் எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் என்கிற பட்டியலை வெளியிடுவது என திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வேகம் காட்டி வருகிறது..
இந்த தேர்தலை பொருத்தவரை நடிகராக இருந்து அரசியல் கட்சியை விஜய்க்கு இளைஞர்களின் வாக்குகள் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த தேர்தலில் தவெக தனித்துப்போட்டியிடுகிறது. அதேநேரம் தவெகவில் வேட்பாளர்களை இறுதிப் செய்வதில் குழப்பம் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் தவெக அவசர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 170 வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த பட்டியலை ஏற்கனவே விஜடம் கொடுத்து விஜய் அதை டிக் அடித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது..
ஆனால், இன்று திடீரென அதில் 50 பேர்களை மாற்ற வேண்டும் என சொன்னதால் கோபத்தில் விஜய் பாட்டிலை வீசி எறிந்து விட்டதாக செய்திகள் கசிந்திருக்கிறது. ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், ஜான் ஆரோக்யசாமி என ஆளாளுக்கு ஒரு பரிந்துரை சொல்ல விஜய் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் முழித்து வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.