திமுகவின் இளம் வேட்பாளர் கோகிலாமணி... 26 வயது மருத்துவர் - சென்னையில் 6 எம்.எல்.ஏ-க்களுக்கு 'நோ' டிக்கெட்!
Dinamaalai March 29, 2026 01:48 AM

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் பெரும் அதிரடிகள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவிநாசி தொகுதியில் இளம் பெண் மருத்துவரை திமுக களம் இறக்கியுள்ளது.

யார் இந்த கோகிலாமணி? 26.வயது மருத்துவர். திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். 164 வேட்பாளர்கள் கொண்ட திமுக பட்டியலில் மிகக் குறைந்த வயதுடைய வேட்பாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் இளமையான மற்றும் படித்த ஒருவரை நிறுத்துவதன் மூலம் அந்தப் பகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெற திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 6 பேருக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. செயல்திறன் மற்றும் உள்ளூர் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது:

  • தி.நகர்: ஜெ. கருணாநிதிக்குப் பதிலாகப் புதுமுகம் களமிறக்கப்பட்டுள்ளார்.

  • அண்ணா நகர்: எம்.கே. மோகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

  • வில்லிவாக்கம்: ஏ. வெற்றி அழகன் நீக்கப்பட்டுப் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • ராயபுரம்: ஐட்ரீம் மூர்த்தி (மூர்த்தி) இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

  • திரு.வி.க. நகர்: தாயகம் கவிக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  • எழும்பூர்: இ. பரந்தாமனுக்கும் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

  • நீக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்த புதிய மற்றும் இளம் முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு போன்றோர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

    © Copyright @2026 LIDEA. All Rights Reserved.