19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தொடக்கப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வேண்டுமென்றே தொடரிலிருந்து விலகுகிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.