'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிப்பது அதிமுகதான்'; எடப்பாடி பழனிசாமி..!
Seithipunal Tamil March 29, 2026 03:48 AM

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிப்பது அதிமுகதான். கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக தான் ஆட்சியமைக்கும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை பகுதியில் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது;

இந்த தொகுதி அம்மாவின் தொகுதி. அவர் இருக்கும் போது எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றினாரோ அத்தனையும் அடுத்து நம் ஆட்சியில் மீண்டும் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். திமுக கொடூர ஆட்சி 05 ஆண்டு காலம் நடந்துள்ளது. 05 ஆண்டு ஆட்சியில் சென்னையில் பெரிய திட்டம் ஏதாவது கொண்டு வந்துள்ளார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், கழிப்பறையில் கமிஷன் பெற்று ஊழல் செய்யும் கேவலமான கட்சி திமுக. ஊழல்களுக்காக கலைக்க பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். இப்படி ஒரு கட்சி மீண்டும் தமிழகத்தை ஆளவேண்டுமா.? என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலைஞர் உயிரோடு இருக்கும் போது எப்படி ஸ்டாலினை கொண்டு வந்தாரோ அதே போல் தற்போது ஸ்டாலின், அவரது மகன்  உதயநிதிக்கு செய்து வருகிறார் என்றும், அவர்களது வாரிசாக இருந்தாலும் ஆண் வாரிசை மட்டுமே தலைமை பண்புக்கு கொண்டு வருகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

அவர்கள் (திமுக) குடும்பத்தினருக்கு மட்டும் தான் ஆட்சி, கட்சி இரண்டிலும் உயரிய பதவி வழங்கப்படுகிறது என்றும், ஆனால், அதிமுக ஜனங்களுக்கும் ஏழைகளுக்கும் உண்டான கட்சி என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார். தொடர்ந்து, 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஸ்டாலின் சொல்கிறார் தமிநாட்டு அணிக்கும் டெல்லிக்கும் தான் போட்டி என்று. தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டி இருந்தே எங்கள் தலைமையில் தான் என்று தெரிவித்துள்ளார். 

முதல்வர் வேட்பாளர் நான் தான் என்று சொன்னது நான் அல்ல. உள்துறை அமைச்சர் அமித்ஷா. என்ன பேசுவதென்றே தெரியாமல் பயப்படும் கட்சி திமுக என்று விமர்சித்துள்ளார். ஸ்டாலினுக்கு டெல்லி என்றாலே பயம் தான் என்றும், நீங்கள் என்ன அரச பரம்பரையா? உங்கள் குடும்பத்தினர்கள் தான் நாட்டை ஆள வேண்டுமா? என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. சட்டமன்றத்தில் ஒரு நாள் கூட திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினையை பேசியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிமுக கூட்டணி ஒரு போதும் அப்படி இருந்தது இல்லை என்றும், திமுக கட்சி கூட்டணி கட்சிகளை அடிமை போல நடத்தி வருகிறது. திமுக வில் இருந்தால் கூட்டணி கட்சிகளுக்கு இதன் இறுதி வரை நிலை.  தன் மகன் உதயநிதியை எப்படியாவது முதல்வராக ஆக்க வேண்டும் என்பது தான் ஸ்டாலின் ஒரே கனவு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களின் ஆட்சி வரவேண்டும் என்றால் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும், வீட்டு வரியை ஏற்றியது மட்டும் அல்லாமல் குப்பைக்கு வரி ஏற்றிய ஒரே கேவலமான அரசு திமுக அரசு என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படி ஒரு அரசு மீண்டும் அமைய கூடாது என்றும்,  அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் இதை குறைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொள்ளையடிப்பதில் தான் இந்த திமுக ஆட்சி இருந்தது என்றும், போதை பொருள் எங்கு பார்த்தாலும் உள்ளது. கஞ்சா இல்லாத இடங்களே இல்லை என்ற நிலை உள்ளது. போதை ஆசாமி காவலரை எட்டி உதைக்க கூடிய காட்சி இந்த ஆட்சியில் தான் நடக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

உலகில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேச பட்ட காவல்துறை. போதை ஆசாமிகளால் தாக்க படுவது இந்த ஆட்சியில் நடக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அம்மா உணவகத்திற்கு சரியான பொருட்கள் வாங்கி தரவில்லை. ஆனால், மீண்டும் ஆட்சி அமைந்தால் சிறப்பாக அந்த உணவகங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.