பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பங்குனி ~ 15 (29.3.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 9.32 am வரை ஏகாதசி பின் துவாதசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 4.05 pm வரை ஆயில்யம் பின் மகம்
யோகம் ~ த்ருதி
கரணம் ~ பத்திரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம் / அசுபயோகம்
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.16
சந்திராஷ்டமம் ~ 4.05 pm வரை தனுர் பின் மகரம்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ துவாதசி
இன்று ~ சர்வ ஏகாதசி / கரிநாள்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (29-3-2026) ராசி பலன்கள் மேஷம்
உறவினர்கள் வழியில் புரிதல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பிரமை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : அமைதி தேவை.
பரணி : நன்மை உண்டாகும்.
கிருத்திகை : முயற்சி பலன் தரும்.
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தடங்கல் நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : ஆதரவு பெருகும்.
மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் கூடும்.
திருவாதிரை : பொறுமை அவசியம்.
புனர்பூசம் : செல்வாக்கு உயரும்.
கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். தோற்றப்பொழிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். கம்பீரமான பேச்சுகளால் காரிய அனுகூலம் உண்டாகும். பயம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நிறைவு கிடைக்கும்.
பூசம் : வெற்றி உண்டாகும்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவுகள் பிறக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். கவலை தீரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : கவனம் தேவை.
பூரம் : உயர்வு கிடைக்கும்.
உத்திரம் : விழிப்புணர்வு அவசியம்.
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : சுபம் கூடும்.
அஸ்தம் : நிம்மதி பெருகும்.
சித்திரை : தனலாபம் உண்டு.
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எண்ணம் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சித்திரை : வேகம் கூடும்.
சுவாதி : மதிப்பு உயரும்.
விசாகம் : புகழ் கிடைக்கும்.
வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு கூடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : யோகம் கூடும்.
அனுஷம் : உதவி கிடைக்கும்.
கேட்டை : ஆர்வம் பிறக்கும்.
குழப்பமான சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற உழைப்பை மேம்படுத்த வேண்டும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். ஆதாயம் அடையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அலைச்சல் இருக்கும்.
பூராடம் : பொறுமை தேவை.
உத்திராடம் : உழைப்பு உயர்த்தும்.
வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரிய தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பூர்வீகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடனான சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : மகிழ்ச்சி நிலைக்கும்.
திருவோணம் : ஆர்வம் கூடும்.
அவிட்டம் : வெற்றி நிச்சயம்.
பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைக்கூடி வரும். அரசாங்க காரியங்கள் நிறைவு பெறும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : நலம் பெருகும்.
சதயம் : யோகம் உண்டாகும்.
பூரட்டாதி : வெற்றி கிட்டும்.
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.
உத்திரட்டாதி : உறவு பலப்படும்.
ரேவதி : அமைதி உண்டாகும்.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil