“விஜய் வந்தா எங்களுக்குப் பாதிப்பு இல்ல…. ஆனா திமுக-வுக்குத் தான் ஆப்பு” டிடிவி தினகரனின் அதிரடி பேட்டி….!!
SeithiSolai Tamil March 29, 2026 10:48 AM

2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “தமிழகத்தில் திமுக ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால், அவர்கள் நிச்சயம் அதிமுக-வைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அதிமுக-வின் முக்கியத்துவத்தை அவர் வெளிப்படையாக வழிமொழிந்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் மிகத் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

தனது தலைமையிலான அமமுக இடம் பெற்றுள்ள என்டிஏ (NDA) கூட்டணியின் வாக்கு வங்கிக்கு, விஜய் அல்லது சசிகலாவின் வருகையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். “விஜய்யின் அரசியல் வருகை திமுக-வின் வெற்றியைத் தான் பாதிக்கும்; எங்களுடைய பலம் அப்படியே தான் இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் 11 தொகுதிகளில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரனின் இந்த பேச்சு, வரும் தேர்தலில் திமுக-வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒருமுகப்படுமா என்ற விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.