“மனுஷன்யா இவரு…. இதுக்காவே இவரைப் பிடிக்கும்” சஞ்சு சாம்சன் செய்த அந்த ஒரு விஷயம்…. வைரலாகும் 'மெர்சல்' வீடியோ….!!
SeithiSolai Tamil March 29, 2026 10:48 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், மைதானத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிடுவது மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு ‘ஜென்டில்மேன்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பழைய வீடியோவில், அணியின் மேலாளர் ரோமி பிந்தர் அமர இடமில்லாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த சஞ்சு சாம்சன், சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தான் அமர்ந்திருந்த இருக்கையை அவருக்காக விட்டுக் கொடுக்கிறார்.

ஒரு பெரிய ஸ்டார் பிளேயராக இருந்தும், சக ஊழியருக்கு அவர் காட்டிய இந்த மரியாதை சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “நிஜமாவே சஞ்சு ஒரு மென்மையான மனிதர் பாஸ்… இதனாலேயே இவரை தலைமேல் வச்சுக் கொண்டாடணும்!” என மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக் கோப்பையில் 321 ரன்கள் குவித்து ‘மாஸ்’ காட்டிய சஞ்சு, இப்போது இந்த வீடியோ மூலம் மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார். ஆட்டம் மட்டுமில்லை, ஒரு மனிதராக சஞ்சு சாம்சன் காட்டும் இந்த அடக்கம்தான் அவரை ஒரு ‘கம்ப்ளீட் பிளேயராக’ மாற்றியுள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.