அரசியலில் தனக்கு பதவி கொடுக்கவில்லை.. தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்பதற்காக ஒரு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சிக்கு தாவுவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. தனக்கு பதவி கொடுக்கவில்லை என்றாலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் கொள்கைதான் முக்கியம் என சொல்லி ஒரே கட்சியில் பயணிப்பவர்கள் வெகு சிலர் மட்டுமே..
குறிப்பாக தேர்தல் வரும்போது ஒரு கட்சியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால் கோபத்தில் அந்த கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் போய் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கியவர்கள் பலரும் இருக்கிறார்கள். அது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. அதிமுகவில் சீட் கொடுக்கவில்லை என்பதற்காக இரண்டே நாளில் கட்சி மாறி தவெகவில் இணைந்து ஒருவர் தேர்தலில் சீட் வாங்கிய கதையெல்லாம் நடந்தது..
ஒருபக்கம் ஏற்கனவே அதிமுகவில் இருந்த, அதிமுக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட சிலர் தற்போது தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் யாரென பார்ப்போம்:
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா தற்போது தவெக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்..
அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தவெக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2024ம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டவர்..
2016ம் வருடம் அதிமுக எம்எல்ஏவாக இருந்த தூசி மோகன் தற்போது தவெக வேட்பாளராக செய்யாறு தொகுதியில் போட்டியிடுகிறார்.
2019ம் வருடம் சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரெட்டியார்பட்டி நாராயணன் தற்போது தவெக வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதேபோல் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், கு.ப. கிருஷ்ணன் லால்குடியிலும், சுப்ரமணியன் கந்தர்வகோட்டைலும் தவெக வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்..