#BREAKING : விசிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு...காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி..!!
Top Tamil News March 30, 2026 01:48 AM

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, வரும் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி) மற்றும் பண்ரூட்டி ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், விசிக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

கட்டுமன்னார்கோவில் - திருமாவளவன்

செய்யூர் - சிந்தனைச் செல்வன்

திருப்போரூர் - பன்னீர் தாஸ்

பெரியகுளம் - ஆற்றல் அரசு

பண்ருட்டி - அப்துல் ரகுமான்

திண்டிவனம் - வன்னி அரசு

அரக்கோணம் - எழில் கரோலின்

கள்ளக்குறிச்சி - மாலதி

கடந்த முறை நாகை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட சிலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.