அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், போரை நிறுத்த ஈரான் இப்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அதற்காக 5 மிக முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னின்று நடத்த முன்வந்துள்ளது. ஈரானின் நிபந்தனைப்படி, தங்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ்’ நீரிணைப்புப் பகுதி முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் ஈரான் பிடிவாதம் பிடித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஈரானின் இந்த 5 அதிரடி நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வாரா அல்லது போர்க்களம் மீண்டும் சூடாகுமா என்பதே இப்போதைய உலக நாடுகளின் பெரிய கேள்வியாக உள்ளது.