திருநெல்வேலி மாநகரத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியில் முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அந்த சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் இனிப்பு கடை அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த சிந்துபூந்துறையைச் சேர்ந்த 49 வயதான ரவிசங்கரை காவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்டு, உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சுமார் 2 கிலோ 820 கிராம் எடையுடைய புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரவிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் மேற்கொண்டிருந்த சட்டவிரோத செயல்கள் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.