ஐபிஎல் தொடரின் 19வது சீசன், நேற்று முன்தினம் (மார்ச் 28) ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு கட்டமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கும் நிலையில், முதல் போட்டியில் ஹைதராபாத்தை நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. அடுத்ததாக, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ்செய்து மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்தது.அதிலும் 13 வருடங்களுக்கு பின்னர் மும்பை அணி முதல் போட்டியில் வெற்றிப்பெற்று மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.
அதன்படி, இன்று மூன்றாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. மழைகாரணமாக போட்டி நடக்குமா அல்லது ஓவர்கள் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மழை நின்ற படியால் வழமையான நேரத்திற்கு போட்டி தொடங்கியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதனபடி முதலில் களமிறங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே அதிர்ச்சி கொடுத்து ரசிகர்களின் பி.பியை வழமைபோல ஏற்றியது. தொடக்கத்தில் களமிறங்கிய சஞ்சு முதல் கேப்டன் ருதுராஜ் வரை அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அணியின் சார்பாக ஜேமி ஓவர்டன் மாத்திரம் பொறுப்பாக ஆடி, 43 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்த வந்த அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர். இறுதியில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மாத்திரம் எடுத்தது. 128 ரன்கள் என்ற இலகு வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அணி சார்பில் வைபவ் சூரியவன்ஷி 52 எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்து இருந்தார்.