இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. டிகிரி முடித்தவர்கள் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் (TNSC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Deputy Manager (Production / Technical / Operation and Maintenance), Assistant Engineer (Civil), Supervisors
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் B.E / B.Tech அல்லது ITI Fitter உடன் ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் (PG Degree) பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குப் பணியின் தன்மைக்கு ஏற்ப மாதம் ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.