இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு - நேற்றே குவிந்த 'குடி'மகன்கள்!
Dinamaalai March 31, 2026 08:48 AM

இன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதைப் போலவே இன்று சென்னையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இறைச்சிக் கூடங்களை நாளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் இன்றைய  தினம் செயல்படாது

எனவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் இதர கால்நடைகளை வதைப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகாவீர் ஜெயந்தி முடிந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் அனைத்து இறைச்சிக் கூடங்களும் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், ‘குடி’மகன்கள் நேற்று இரவே கைக்கொள்ளாமல் துணி பைகளைக் கொண்டு வந்து டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்து பாட்டில்களை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.