சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூா், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் இன்று 31- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகிறது. இறைச்சிக் கூடங்களின் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 31-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.
எனவே, அன்றைய தினம் தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், அன்றைய தினம் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 4 மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும்.அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.