அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு..?
Seithipunal Tamil March 31, 2026 06:48 AM

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகளும், நாதக மற்றும் தவெக ஆகியவை தனியாகவும் களம் காண்கின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரு முக்கிய தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை தங்களது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக தமிழ்நாடு தேர்தல் மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை காலை 10 மணிக்கு சென்னை வரவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பாஜகவின் தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.