கொளத்தூர் தொகுதியில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன? என மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய், நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் மீது பெரவள்ளூர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பதாகவும், பாதுகாப்பு வசதி ஏற்படவில்லை என்றும் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி தவெக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனிடையே அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன? என மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விஜய் பிரசாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பாக விவரங்களும் கோரப்பட்டுள்ளன. பிரசாரத்தில் அனைவருக்கும் சமமான நடைமுறைகளை பின்பற்ற டிஜிபிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.