4 லட்சம் KitKat சாக்லேட் திருட்டு.. இண்டர்நெட்டில் மீம்ஸ்களை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்..!
Webdunia Tamil March 31, 2026 08:48 PM

ஐரோப்பாவில் சுமார் 12 டன் எடை கொண்ட 4 லட்சம் KitKat சாக்லேட் பார்கள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது உலகையே அதிரவைத்துள்ளது.

இத்தாலியிலிருந்து போலந்து நாட்டிற்கு சென்ற லாரியில் இருந்த இந்த சாக்லேட்டுகள் வழியிலேயே மாயமாகியுள்ளன. திருடப்பட்ட இந்த சாக்லேட்டுகள் சாதாரணமானவை அல்ல, அவை ஃபார்முலா 1 கார் பந்தயத்திற்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கார் வடிவ சாக்லேட்டுகள் ஆகும்.

இந்த செய்தியை தொடர்ந்து நெஸ்லே நிறுவனம், "கிட்கேட் விளம்பரத்தில் சொல்வது போல யாரோ ஒருவர் மிகவும் நீண்ட இடைவேளை எடுக்க முடிவு செய்துவிட்டார்கள் போல" என நகைச்சுவையாக கருத்துத் தெரிவித்துள்ளது.

இணையவாசிகள் இதனை வைத்து விதவிதமான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். "ஜிடிஏ கேம் போலவே நிஜத்தில் சாக்லேட் கொள்ளை நடந்துள்ளது" என்றும், "இனி வாழ்நாள் முழுவதும் அவர்கள் சாக்லேட் மட்டுமே சாப்பிடுவார்கள்" என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த கொள்ளை ஒருபுறம் அதிர்ச்சியை தந்தாலும், சமூக வலைதளங்களில் இது ஒரு பெரிய மீம்ஸ் திருவிழாவாகவே மாறியுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.