சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து பல ரசிகர்களை பெற்றவர் விஜய். ரசிகர்கள் விஜயை தளபதி என கொண்டாடுகிறார்கள் அவரின் திரைப்படங்கள் பல கோடி வசூலிக்கிறது.. விஜய் நடித்த படம் என்றால் 400 கோடிக்கும் மேல் வியாபாரம் நடக்கிறது. கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர் விஜய் மட்டுமே.
ஒரு படத்திற்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் விஜய். தற்போது அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார்.. நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அதை விட்டுவிட்டு மக்களுக்காக நன்மை செய்ய வந்திருக்கிறேன் என விஜய் சொல்லி வருகிறார்.. வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நடிகரும் விஜயின் நண்பருமான நடிகர் ஷாம் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஏன் விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார் என சொல்லியிருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் எதிலும் சாதிக்க முடியாது.. அரசியலில் முழுமையாக ஈடுபடவே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.. ஜனநாயகன் படம் வெளியானால் தமிழ் சினிமாவில் அனைத்து சாதிகளின் முறியடிக்கும்’ என அவருக்கு சொல்லியிருக்கிறார்..