ஓடும் ரயிலில் பெண்ணிடம் சீண்டல்... தர்ம அடி கொடுத்த சக பயணிகள்... அதிர்ச்சி வீடியோ!
Dinamaalai April 01, 2026 09:48 PM

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அந்த நபர் தன்னை அநாகரிகமான முறையில் தொட்டதாக பாதிக்கப்பட்ட பெண் சத்தமிட்டுக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் மற்றும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் இடையே ரயிலிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அந்த நபரைக் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தர்ம அடி கொடுத்துத் தாக்கினர். இந்த திடீர் மோதலால் ரயிலில் இருந்த மற்ற பயணிகள் இடையே பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் அந்த நபரை மீட்டுத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் அந்த நபரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொது இடத்தில் பெண்களுக்கு எதிராக இத்தகைய அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.