40 சதவீத வாக்குகள்!.. 181 - 189 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்!.. லோக் போல் கருத்துக்கணிப்பு!...
WEBDUNIA TAMIL April 01, 2026 11:48 PM


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலே எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்? எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெறும் என்றெல்லாம் பலரும் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவார்கள். ஏற்கனவே பல கருத்துக்கணிப்புகள் வெளியானது. சில கருத்துக்கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாக இருந்தது. ஆனால் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சியை பிடிக்கும் எனவும், இரண்டாம் இடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் தமிழக வெற்றி கழகமும், நான்காம் இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இருக்கும் என சொல்லியது.

இந்நிலையில்தான் பிரபல லோக் போல் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி திமுகவே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது திமுக 181 முதல் 189 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும், அந்த கட்சி 40.1 சதவீத வாக்குகளை பெறும் என
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து அதிமுக 38 முதல் 42 தொகுதிகளில் வெற்றி பெறும்.. 29 சதவீதிகளை அந்த கட்சி பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

மூன்றாவது இடத்தில் தவெக இருக்கிறது.. இந்த கட்சி 8 முதல் 10 இடங்களில் வெற்றிபெறும் எனவும் 23.9 சதவீத வாக்குகளை இந்த கட்சி பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 4ம் இடத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி இருக்கிறது.. இந்த கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது.. அதே நேரம் 4.9 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
.
அதோடு, மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து 2.1 சதவீத வாக்குகளை வாங்கும் எனவும், எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.