நீண்ட நேரம் அமர்ந்து இருக்கிறீர்களா?- உடல்நல அபாய எச்சரிக்கை!
Top Tamil News April 01, 2026 11:48 PM

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது உடல் இயக்கமின்மையை ஏற்படுத்தி, முதுகுத் தசை பலவீனம் மற்றும் ரத்த ஓட்டக் குறைபாடு போன்ற பிரச்சினைகளை உருவாக்குகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் இடைவெளி இல்லாமல் அமர்ந்து இருப்பது உடல்நலத்தில் மறைமுக பாதிப்புகளை அதிகரிக்கிறது. உடல் இயக்கமின்மை காரணமாக முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் படிப்படியாக சுருங்கி பலவீனமடைகின்றன. இதனால் உடல் இயக்கத்தை சார்ந்த திசுக்கள் பாதிக்கப்படுவதுடன், ரத்த ஓட்டமும் குறைகிறது. தசை இறுக்கம் மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

  • கை மற்றும் கால்களை அசைத்து செய்யப்படும் ஏரோபிக் நடைப்பயிற்சி உடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது; குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
  • நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நேராக நிமிர்ந்து உட்காருவது அவசியம்.
  • ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 முதல் 5 நிமிடங்கள் வரை இடைவெளி எடுத்து எழுந்து நடப்பது முக்கியம்.
  • தோள்பட்டை மற்றும் கழுத்தை அசைப்பது, உடலை திருப்புவது போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.