இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட போலி மிரட்டல் செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக, கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனிவாஸ் லூயிஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கடந்த திங்களன்று மைசூருவில் உள்ள அவரது வாடகை வீட்டில் வைத்து பிடிக்கப்பட்டார். தற்போது அவர் ஆறு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றச் செயலுக்கான பின்னணி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சீனிவாஸின் தந்தைக்கு மைசூருவில் இருந்த நில தகராறு தொடர்பான வழக்கில் நீண்ட காலமாக தீர்வு கிடைக்காதது தெரியவந்தது. இதனால் நீதித்துறை மற்றும் அரசு அமைப்புகள் மீது அவருக்கு தீராத கோபம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செய்திகள் மூலம் போலி மிரட்டல்களை விடுத்துள்ளார். ஒரு தனிநபரின் நில தகராறு, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் அச்சுறுத்தும் வகையில் மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva