எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை - முதல்வர் ஸ்டாலின்
Top Tamil News April 02, 2026 11:48 PM

2016 தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

கோவை பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சி அமைத்தபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் PPE கிட் அணிந்து கோவை மருத்துவமனையில் ஆய்வு செய்தேன். கோவையும் எனது ஊர் என்று சொல்லும் அளவிற்கு கோவையுடன் ஒன்றியிருக்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ வந்தார். நாம் 40க்கு 40 வெற்றி பெற்றோம். இப்போதும் அடித்து சொல்கிறேன். அவர் வந்தால் நமது 200 தொகுதி வெற்றி உறுதியாகிவிடும். பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம். எங்கள் சாதனைகளை முறியடிக்கும் வகையில் செயல்படுவோம். கோவையில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். 

கோவைக்கு பல்வேறு சாதனை திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். செம்மொழி பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு மேம்பாலம் மேலும் 5 கி.மீ. நீட்டிக்கப்பட உள்ளது. எங்கள் சாதனைகளை போன்று ஈபிஎஸ் சாதனைகளை பட்டியலிடுவாரா? 2016 தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை.  எதையும் செய்யாமல், அதிமுக தேர்தல் அரிக்கையை நாம் காப்பியடித்ததாக சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட சொல்லுங்கள். மத்திய அமைச்சர்கள் தமிழர்களை இழிவாக பேசினர். நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மறந்து விடுவார்கள்” என்றார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.