“தவெகவால் திமுகவின் வெற்றி பாதிக்காது”- சபரீசன்
Top Tamil News April 03, 2026 12:48 AM

வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் களமிறங்கியுள்ளார். சபரீசனுடன் கூட்டத்தில் அவரது
மனைவியும், முதல்வரின் மகளுமான செந்தாமரை பங்கேற்றார்.

 


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபரீசன், “நீங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்திருக்கிறீர்கள், அது நிறைவேற்றப்படும். திமுகவின் வெற்றி மிகவும் பிரகாசமாக உள்ளது, நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். தேர்தலில் தவெக இருப்பது ஒருபோதும் திமுகவின் வெற்றியை பாதிக்காது. ஒரே நபர் தொகுதிகளில் போட்டியிடுவது அவரின் தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.