மலையாள சினிமாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சத்தா பச்சா. இந்தப் படத்தை இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கி உள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை சானூப் தைகூடம் மற்றும்
அமல் ஷா ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். நடிகர் மம்முட்டி இந்தப் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் அர்ஜுன் அசோகன்,
ஆல்வின் முகுந்த், ரோஷன் மேத்யூ, அர்ச்சித் அபிலாஷ், விஷக் நாயர், தேவ் நாராயணன், இஷான் ஷௌகத், ஓர்ஹான் ஹைதர், லட்சுமி மேனன், சித்திக், சாய் குமார், ரஃபி, கார்மென் எஸ். மேத்யூ, தர்தகனன் சாபு, வைஷ்ணவ் பிஜு, சியாமபிரகாஷ் எம்.எஸ். முத்துமணி, மினான், டோஷ் கிறிஸ்டி, டோஜ் கிறிஸ்டி, கிருஷ்ண நம்பியார், ஸ்டெஃபி பிரான்சிஸ், ஆரவ் உமேஷ், தெஸ்னி கான், வேதிகா ஸ்ரீகுமார், ஜரின் ஷிஹாப், அத்வைத் நாயர், ஷிஹான் சௌகத், அமல் ஷா, காலித் அல் அமெரி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் வெளியாகி உள்ள சத்தா பச்சா படம் எப்படி இருக்கு?சத்தா பச்சா என்றால் செய் அல்லது செத்துமடி என்று அர்த்தம். புல்லட் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மம்முட்டி ஒரு பெரிய குத்துச்சண்டை வீரராக இருக்கிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் மூன்று பேருக்கும் குத்துச்சண்டை என்றால் மிகவும் பிடிக்கும் சிறு வயதில் இருந்தே அதன் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் கொச்சியில் குத்துச்சண்டை போட்டியை நடத்த முடிவு செய்கிறார்கள். இந்த போட்டி ஆரம்பித்தது அவர்களின் எதிரிக்கு பிடிக்கவில்லை.
Also Read… ஆட்சியும் மாறும்… காட்சியும் மாறும்… TN 2026 படத்தின் டீசர் இதோ!
இந்த நிலையில் எதிரிகள் அண்ணன் தம்பி மூன்று பேருக்கும் இடையே சண்டையை மூட்டி பிரிக்க முயற்சிக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் இறுதியில் அவர்கள் இடையே பிரச்சனை முடிந்ததா? இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சாரின் அந்தப் படம் தான்… மனம் திறந்து பேசிய சாய் அபயங்கர்