“ஈரான் ராணுவத்தின் புதிய விஸ்வரூபம்!”.. அமெரிக்காவையே அலறவிட்ட மொஜிதபா காமேனி… உலக நாடுகளை அதிரவைத்த 5 அதிரடி முடிவுகள்..!!!!
SeithiSolai Tamil April 02, 2026 11:48 PM

ஈரான் மீதான தாக்குதலில் அந்த நாடு நிலைகுலைந்து போகும் என நினைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜிடபா காமேனி மரண அடி கொடுத்துள்ளார். ஈரான் போர் தொடங்கி 34 நாட்களே ஆகியுள்ள நிலையில் எடுத்த 5 அதிரடி முடிவுகள் வல்லரசு நாடான அமெரிக்காவை மண்டியிட வைத்துள்ளது.

குறிப்பாக, உலகிற்கே கச்சா எண்ணெய் செல்லும் முக்கிய பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ உடனடியாக மூடியதன் மூலம் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈரான் பக்கம் திருப்பியுள்ளார்.

இதில் நிலைகுலைந்த டிரம்ப், இப்போது அங்கிருந்து பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மொஜிதபாவின் இருப்பிடத்தை அமெரிக்க உளவு அமைப்புகளால் கூட கண்டறிய முடியாத அளவுக்குத் தன்னை ரகசியமாக வைத்துக் கொண்டு, ‘மிஸ்டரி மேன்’ ஆக அவர் செயல்படுவது அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஈரானிய ராணுவத்தை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, அவர்கள் நினைத்த நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் அதிகாரத்தை பரவலாக்கியது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. அமெரிக்காவிற்குத் தோள் கொடுத்த பிரிட்டன் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் பயந்துபோன பிரிட்டன், இப்போது போரிலிருந்து ஒதுங்கிக் கொண்டது.

இதனால் சர்வதேச அரங்கில் அமெரிக்கா தனித்து விடப்பட்டுள்ளது. வெறும் எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் மூலம் மட்டுமே ஈரானை வழிநடத்தும் மொஜிதபா, அமெரிக்காவின் எந்த ஒரு பொய்ப் பிரச்சாரமும் எடுபடாத வகையில் தகவல் தொடர்பை வலுப்படுத்தியுள்ளார்.

“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது” என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, டிரம்ப் நிர்வாகத்தை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.