மனிதநேயத்தின் உச்சம்.. சமையலறையில் அழுத பணிப்பெண்.. ஓடி வந்த உரிமையாளர்.. இளைஞர் செய்த அந்த ஒரு செயல்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!!
SeithiSolai Tamil April 04, 2026 11:48 AM

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி, மனிதநேயத்தின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. கிரிதார்த் என்ற இளைஞர், தனது வீட்டில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதி என்ற பெண் சமையலறையில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துள்ளார்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதி, அன்று தனது பிறந்தநாள் என்றும், தனது தாய் உயிரோடு இருந்திருந்தால் தன்னை நேசித்திருப்பார் என்றும் கூறி வருந்தியுள்ளார். இதைக் கேட்டு மனமுடைந்த கிரிதார்த், அந்தப் பெண்ணின் சோகத்தைப் போக்கி அன்றைய தினத்தை மகிழ்ச்சியானதாக மாற்றத் தீர்மானித்தார்.

கிரிதார்த்தும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு கேக் வரவழைத்து, ஜோதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்த எளிய கொண்டாட்டத்தின்போது, ஜோதி காட்டிய அன்பு அனைவரையும் நெகிழச் செய்தது. தன்னிடம் இருந்த 500 ரூபாயைக் கொடுத்து, அனைவரும் சேர்ந்து நல்ல உணவை ஆர்டர் செய்து சாப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 

View this post on Instagram