தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் நிலவிய குளறுபடிகளைச் சரிசெய்யும் வகையில், இன்று அதிரடியாகத் திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உள்ளார்.
ஏற்கனவே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் தாக்கல் செய்த மனுக்களில் வயது மற்றும் வழக்கு விவரங்கள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஒரு தொகுதியில் ‘வழக்கு இல்லை’ என்றும், மற்றொரு தொகுதியில் ‘வழக்கு நிலுவை’ என்றும் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வேட்புமனுப் பரிசீலனையின் போது எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவிப்பதையும், அதன் மூலம் மனு நிராகரிக்கப்படுவதையும் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாற்றத்தை விஜய் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் விதிகளின்படி இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றாலும், விஜய்யின் இந்தத் திருத்தப்பட்ட மனு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.