பிரபல கோல்ஃப் ஜாம்பவான் டைகர் வூட்ஸ், புளோரிடாவில் போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் போனில் பேசியதாகக் கூறும் அதிர்ச்சியூட்டும் ‘பாடிகேம்’ வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தனது லேண்ட் ரோவர் காரால் ஒரு டிரக் டிரெய்லர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டைகர் வூட்ஸ், அந்த இடத்திற்கு வந்த போலீசாரிடம், “நான் இப்போதுதான் அதிபரிடம் பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சோதனையின்போது அவரிடம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அவர் போதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்த விபத்து நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான், வரவிருக்கும் மாஸ்டர்ஸ் தொடரில் டைகர் வூட்ஸ் பங்கேற்க மாட்டார் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது டிரம்ப்பின் முன்னாள் மருமகள் வனேசா டிரம்ப் உடன் டைகர் வூட்ஸ் காதலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது உடல்நலம் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்துவதற்காகத் தற்காலிகமாகப் போட்டிகளில் இருந்து விலகுவதாக 50 வயதான டைகர் வூட்ஸ் அறிவித்துள்ளார். இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.