கயல் சீரியல் நடிகை தற்கொலை……சோகத்தில் ரசிகர்கள்
CineReporters Tamil April 06, 2026 03:48 PM

சென்னையில் பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமானது கயல் சீரியலும் ஒன்று. பி. செல்வம் இயக்கியுள்ள இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி சஞ்சீவ் கார்த்திக் உடன் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை சுபாஷினி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் கணவ்ருடன் பெங்களூரில் வசித்து வந்தார். படப்பிடிப்பிற்காக சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சென்றுவந்தார்.

இந்த நிலையில் தனது இல்லத்தில் நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுபாஷினி தனது கணவருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகறாறு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணாம அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி. இவர் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த இவர் பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தங்கி வந்தார்.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.