அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் புதிய 'இரண்டு கட்ட அமைதித் திட்டத்தை' முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். அதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நிரந்தர உடன்பாடு எட்டப்படும்.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. விரைவில் இந்த அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்த தூதரக முயற்சி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வடிவமைத்த இந்த முன்மொழிவு நேற்று இரவு வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுக்கும் பகிரப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் போர் அச்சம் நிலவும் சூழலில், இந்த உடனடி போர் நிறுத்த முயற்சி உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.
Edited by Siva