கூகுள் பிக்சல் 10 பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. GameNative 0.9.0 என்ற புதிய அப்டேட் மூலம், இப்போது Steam தளத்தில் உள்ள கணினி விளையாட்டுகளை ஆஃப்லைனிலேயே பிக்சல் போன்களில் விளையாட முடியும்.
இதற்கு முன்னதாக ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட போன்களில் மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த அம்சம், இப்போது கூகுளின் டென்சர் G5 சிப்செட்டில் உள்ள PowerVR GPU-க்கும் ஆதரவு அளிக்கிறது.
இந்த அப்டேட் மூலம் Stardew Valley மற்றும் Hades போன்ற பிரபலமான பிசி கேம்களை மொபைலிலேயே மிக மென்மையாக விளையாடலாம். மேலும், சாம்சங் டெக்ஸ் போன்ற டெஸ்க்டாப் மோட் வசதியையும் இது ஆதரிக்கிறது. இதன் மூலம் மொபைலை மானிட்டருடன் இணைத்து, கீபோர்டு மற்றும் மவுஸ் பயன்படுத்தி ஒரு கணினியில் விளையாடுவது போன்ற உணர்வை பெறலாம்.
பேட்டரி வெப்பநிலையை கண்காணிக்கும் வசதி, ஸ்டீம் ஒர்க்ஷாப் இணைப்பு போன்ற கூடுதல் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இது இன்னும் ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதால் சில பிழைகள் இருக்கலாம், இருப்பினும் மொபைல் கேமிங் துறையில் இது ஒரு மிகப்பெரிய புரட்சியாக கருதப்படுகிறது.
Edited by Siva