லெஜெண்ட் படம் மூலம் அறிமுகம் ஆனவர் லெஜெண்ட் சரவணன். ஜேடி ஜெர்ரி இயக்கிய அந்த படம் பாக்ஸ் ஆபிஸீல் தோல்வியை தழுவியது. அதுமட்டுமல்லாமல் அந்த படக் காட்சிகள் சமூகவலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக பகிரப்பட்டது. ஆனால் தனது இரண்டாவது படத்திலேயே ட்ரோல்களை முறியடித்து அதனை முறியடித்து
பாக்ஸ் ஆபிஸீலும் கலக்கி வருகிறார் சரவணன்.
காகி சட்டை, எத்ரி நீச்சல் கருடன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லீடர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
நாயகியாக பாயல் ராஜ்புட் நடிக்க, ஆண்ட்ரியா, ஷியாம், விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, மதுரை முத்து என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவதால், குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் சீராக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனார். அதன்படி லீடர் திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.25 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்த மாதம் வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே குறுகிய காலத்தில் அதிக வசூல் செய்த படமாக ‘லீடர்’ உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஓவர்சீஸ் மார்க்கெட்டிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது .