தற்போது பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதையே விரும்புகின்றனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுவதை தவிர்க்க, அமெரிக்காவை சேர்ந்த 'சூப்பர்ஹியூமன்' என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒரு சுவாரசியமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கட்டாயப்படுத்தி ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதற்கு பதிலாக, அவர்கள் விரும்பி வரும் வகையில் உதவித்தொகை மற்றும் பயண சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு காலாண்டுக்கு சுமார் 1.8 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இரண்டு நாட்கள் வருபவர்களுக்கு 500 டாலர்கள் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை ஊழியர்கள் ஜிம் மெம்பர்ஷிப், குழந்தை பராமரிப்பு, மளிகை பொருட்கள் விநியோகம் மற்றும் வீட்டு பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர, அலுவலகத்திலேயே மதிய உணவு மற்றும் சில நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக, அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை 57% அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் முதன்மை மக்கள் அதிகாரி கென்னி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
Edited by Siva