சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சாலை தடுப்பில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயர் பட்டு, திருநங்கை ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மாரிமுனை பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற அந்தத் திருநங்கை, அவ்வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாகத் தலையில் மின்சார ஒயர் பட்டதில் மின்சாரம் தாக்கி பலியானார். இந்தத் திடுக்கிடும் விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மின்சார ஒயர் அறுந்து கிடப்பது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால்தான் புஷ்பாவின் உயிர் பறிபோனதாகக் கூறி, அவரது உறவினர்களும் சக திருநங்கைகளும் கடற்கரை சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். உயிரிழந்த புஷ்பாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்து பெய்து வரும் மழையால் மின் கசிவு அபாயம் உள்ள நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!