மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக வை அகற்றுவோம்!
அப்பாவின் ஆட்சியென்றும், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்றும் நாடகமாடிய திமுகவின் திறனற்ற ஐந்தாண்டுகால ஆட்சியில், தினந்தினம் பாதுகாப்பு பறிக்கப்பட்டு அல்லாடி வருகின்றனர் நம் தமிழ்ப் பெண்கள் என்பதை ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார் நமது தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் திருமதி. குஷ்பூ சுந்தர் அவர்கள்!
பெண்களுக்கு எதிரானது திமுகவின் ஆட்சி என்பதற்கு 56% உயர்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களும், 125% உயர்ந்த குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களுமே சாட்சி! இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு இனி என்றுமே இல்லை நீட்சி!
திமுக ஆண்டது போதும்! தமிழகப் பெண்கள் துயருற்றது போதும்! பெண்கள் நிம்மதியாக வாழ திமுகவை வீழ்த்துவோம்! தமிழகம் காப்போம்!