Jananayagan Leaked: ஜனநாயகன் படக்காட்சிகள் இணையத்தில் லீக்.. படக்குழுவுக்கு திகில் ஷாக்.!
Tamilspark Tamil April 10, 2026 06:48 AM

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகிய ஜனநாயகன் படத்தின் காட்சிகள் கசிந்துள்ளது.

வெளியீடு தாமதம்:

கே.வி.என். புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிய விஜயின் ஜனநாயகன் திரைப்பட வெளியீடு இது வரை இழுபறியாக நீடித்து வருகிறது. படம் தேர்தலுக்கு பின் அல்லது தேர்தல் முடிவுக்கு பின்னரே வெளியாகலாம் என்றும், அதிலும் தேர்தல் முடிவை பொறுத்து வெளியீடு மாறுபடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!

தணிக்கை பிரச்னை தொடர்ச்சி:

எச்.வினோத் இயக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் திரைப்பட வாழ்க்கையில் இறுதி திரைப்படம் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை பிரச்னையை இதுவரை எதிர்கொண்டது தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் கவனிக்கப்பட்டது.

இணையத்தில் கசிந்தது:

இந்நிலையில், விஜயின் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற ஒரு பேரே வரலாறு பாடல் இணையத்தில் கசிந்து இருக்கிறது. சுமார் 5 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. படம் இதுவரை திரையிடப்படாத நிலையில், சென்சார் குழுவினர் படம் பார்க்கும்போது காட்சி எடுக்கப்பட்டதா? அல்லது விஜயின் ரசிகர்கள் படக்குழுவுடன் இருக்கும்போது காட்சியை எடுத்து வெளியிட்டனரா? என மாறுபட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: 19 நிமிட அந்தரங்க வீடியோ.. நீங்கள் ஷேர் செய்தீர்களா?.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.