19-வது ஐபிஎல் போட்டியின் 15வது லீக் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி- லக்னோ அணி பலப்பரிட்சை நடத்தின.
ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி, முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கே.கே.ஆர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 04 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்து 03 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கடைசி வரை களத்தில் நின்ற இளம் வீரர் முகுல் சௌத்ரி 54 எடுத்து ஆட்டத்தை மாற்றினார். இறுதி ஓவரின் அவர் நிதானம் இழக்காது அடித்த ஒரு சிக்ஸர் வெற்றிக்கு வழிவகுத்தது. அதேபோன்று ஆயுஷ் பதோனி அதிக பட்சமாக 54 ரன்கள் எடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக முகுல் செவுத்திரி தேர்வுசெய்யப்பட்டார்.