தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றிடவும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேற செய்யவும் உறுதி கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் திரு. அம்மன் அர்ஜுனன் அவர்களை ஆதரித்து புலியகுளம் விநாயகர் கோயில் முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கரூரில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை அறிந்து பயந்து, பத்து ரூபாய் புகழ் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் கோவைக்கு ஓடி வந்திருக்கிறார். அவருக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி இருக்கிறது? ஊழல் புகாரில் சிக்கி 477 நாட்கள் சிறையில் இருந்தது, ஒவ்வொரு தேர்தலின் போதும் பொய்யான வாக்குறுதி கொடுத்து, தோல்வி பயத்தில் தொகுதி மாறி மாறி போட்டியிடுவது, 5 கட்சிகள் மாறி அரைவேக்காட்டு அரசியல் செய்வது இவைதான் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் தகுதிகள்.
அரசியலில் இருக்கவே தகுதி இல்லாத திரு. செந்தில் பாலாஜி அவர்களை படுதோல்வி அடைய செய்யவும், கடந்த 5 ஆண்டுகால திமுகவின் மோசமான ஆட்சியை இனியும் தொடர விடக்கூடாது என்ற முடிவோடும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.
மேலும் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்களின் ஆதரவையும், பேரன்பையும் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. அம்மன் அர்ஜுனன் அவர்களை கோவை மக்கள் மகத்தான வெற்றிப்பெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! கோவை மென்மேலும் வளரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.