Asha Bhosle Tamil Songs: மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமிழில் பாடிய பாடல்களின் லிஸ்ட்
ராகேஷ் தாரா April 12, 2026 04:44 PM

இந்திய திரையுலகின் மிகப்பெரும் செல்வங்களின் ஒருவரான பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று தனது 92 ஆவது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று சனிக்கிழமை இதயம் மற்றும் மூச்சு விடும் பிரச்சனையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே இன்று பிற்பகல் காலமானதாக அவருடைய மகன் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஆஷா போஸ்லேவின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளன. 

20 க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரம் பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார் ஆஷா போஸ்லே. தமிழில் அவர் பெரும்பாலும் பாடிய பாடல்கள் இளையராஜா இசையில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷா போஸ்லே தமிழில் பாடிய பாடல்களில் பட்டியல் கீழ்வருமாறு :

ஆஷா போஸ்லே தமிழ் பாடல்கள் 

செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன் 

'ஆகாயம் பூலோகம்' , 'ஒரு தேவதை வந்தது' , 'இது காதல் நெஞ்சம் ' , 'உன்னை சுத்தும் ' , 'கண்ணா உந்தன் காதல் மீரா' ஆகிய - நான் சொன்னதே சட்டம்  

' தள்ளி தள்ளிப்போகும் பொன்னையா ' , 'திருட்டு பூனை  இருட்டு வேளையில்' - உலகம் பிறந்தது எனக்காக (ஆர் டி பர்மன் இசையில்)

' எங்க ஊரு காதல் பத்தி' மற்றும் 'முத்து முத்து'  - புது பாட்டு 

தங்கத்தின் தங்கம் படத்தில் 'செவந்தி பூ மாலை கட்டு' 

மீரா - 'பனி விழும் மாலையில் ' , 'ஓ பட்டர்ஃப்ளை' 

சாத்து நட சாத்து - சேதுபதி ஐ.பி.எஸ் 

எங்கெங்கே - நேருக்கு நேர் 

வெண்ணிலா வெண்ணிலா - இருவர் 

நீ பார்த்த பார்வை - ஹே ராம் 

செப்டம்பர் மாதம் - அலைபாயுதே

கொஞ்ச நேரம் - சந்திரமுகி 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.