அதிகாலையில் அதிர்ச்சி! ஜம்மு-காஷ்மீரின் தோடா நகரை 4.6 ரிக்டர் அளவில் குலுக்கிய நிலநடுக்கம்...! - பயத்தில் வெளியே ஓடிய மக்கள்
Seithipunal Tamil April 12, 2026 05:48 PM

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா நகரை இன்று அதிகாலை 4.32 மணியளவில் திடீரென அதிரவைத்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவுகோலில் 4.6 அளவுக்கு பதிவான இந்த அதிர்வு, பகுதியிலுள்ள மக்கள் திடுக்கிட்டு வெளியேறுமளவிற்கு உணரப்பட்டது.

கத்ரா நகருக்கு கிழக்கே சுமார் 91 கிலோமீட்டர் தொலைவில், நிலத்தின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பொருளிழப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.