விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எல்ஐகே. கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் இபடம் வசூலில் ஓகே ரகமாகவே உள்ளது. 2040ம் ஆண்டு காலகட்டங்களில் ஆப் கேட்ஜெட்கள் இளைஞர்களை எப்படி எல்லாம் கட்டுபடுத்துகிறது என்பதே இப்படத்தின் மையகரு. ஆனால் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் படம் வெகு ஜனங்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த் நிலையில் எல்ஐகே திரைப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இன்று மதுரைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் மதுரைக்கு சிக்கன் குழம்பு சாப்பிடத்தான் வந்திருக்கிறேன். எனக்கு மதுரையின் அனைத்து விதமான உணவுகளும் மிகவும் பிடிக்கும். இங்குள்ள சாப்பாட்டுக்கு நான் பெரிய ரசிகன் என்று கூறினார்.
தொடர்ந்து தனது எல்.ஐ.கே படம் குறித்துப் பேசிய அவர், படம் நினைத்ததை விட மிக நன்றாக வந்துள்ளது. இன்று மதுரையில் படம் ரிலீஸான திரையரங்குகளுக்கு நேரில் சென்று மக்களின் ஆரவாரத்தைப் பார்க்கப் போகிறேன். படத்தில் சீமான் வரும் காட்சிகள் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது என்றார்.
மேலும் ஜன நாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது மிகவும் தப்பான விஷயம். இது எனக்கு பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தயவுசெய்து இணையத்தில் லீக் ஆனதைப் பார்க்காமல், மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பாருங்கள் என்ற் பிரதீப் ரங்கநாதன் கூறினார்.