“கவுன்சிலராக கூட அனுபவம் இல்ல.. இவங்க எப்படி ஆளுவாங்க?”… விஜய்யை குறிவைத்துத் தாக்கிய அண்ணாமலை.. காரைக்குடியில் பரபரப்பு..!!!!
SeithiSolai Tamil April 12, 2026 09:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காரைக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவை கடுமையாகச் சாடிப் பேசினார்.

“அரசியல் என்பது ஒரு வண்டி மேல உட்கார்ந்து கொண்டு மக்களுக்குக் கை காட்டுவது மட்டும் கிடையாது; காரைக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ரோடு ஷோவைப் பார்த்தேன், அது வெறும் கண்காட்சி போலத்தான் இருந்தது” என்று அவர் விமர்சித்தார்.

மேலும் இளைஞர்களை நோக்கிப் பேசிய அவர், “இளைஞர்களே, உங்களுக்காகத்தான் நான் பேசுகிறேன். அரசாட்சி என்றால் என்ன, அரசு எப்படிச் செயல்படும் என்பது தெரியாதவர்கள், இதுவரை அரசியலில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூடப் பணியாற்றி அனுபவம் இல்லாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி அரசு அமைப்பார்கள்? அவர்களை வைத்து யாருக்கு என்ன செய்யப் போகிறார்கள்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

அனுபவம் இல்லாதவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தவெக மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.