மருத்துவமனையில் அதிர்ச்சி...! பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு...! - தூத்துக்குடியில் பரபரப்பு!
Seithipunal Tamil April 12, 2026 09:48 PM

தூத்துக்குடி அருகே தெற்கு காலங்கரைப் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவர் உடல்நலக்குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரை கவனிப்பதற்காக அவரது மனைவியும் அதே வார்டில் தங்கியிருந்தார். அந்த வார்டில் பாதுகாப்புப் பணியில் சிப்காட் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.நள்ளிரவு நேரத்தில், அந்த பெண்ணை அணுகிய காவலர், தனது செல்போனை சார்ஜ் செய்ய சார்ஜர் உள்ளதா? என்று கேட்டு உரையாடலை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், அவர் அந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டு, பாலியல் தொந்தரவுகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சம்பவத்தை வெளியே எவரிடமும் தெரிவித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவேன் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிகிச்சை வழங்கப்படும் இடமாகிய மருத்துவமனையிலேயே, பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த காவலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.