Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங்கில் மாற்றம்? – வைரலாகும் தகவல்!
TV9 Tamil News April 12, 2026 09:48 PM

தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan). இவரின் இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 80 கோடிகளுக்கு மேல் திரையரங்குகளில் வசூலித்திருந்தது. அந்த வகையில் தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு சேயோன் (Seyon) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சிவகார்த்திகேயன் லீட் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பானாது கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தை கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கானது இன்னும் தொடங்கவில்லை. ஆனால் இதன் ஷூட்டிங் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே தொடங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 2026 மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா? 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சந்தோஷ் சுப்ரமணியம் படம்

சேயோன் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

என்னை ரசிப்பவர்களுக்காக,
என்னை நேசிப்பவர்களுக்காக,
என்னைவிட என்னைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களுக்காக,
என்னுடைய ரசிகர்களுக்காக,
என் சகோதர சகோதரிகளுக்காக,#சேயோன் #Seyon 💪💪💪https://t.co/6fl6B4JdxO

சூரசம்பவம் Loading…#SeyonOct26 #OneMoreTime@ikamalhaasan #Mahendran…

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

இந்த சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்படத்திலும் நடிப்பதற்கு நடிகைகள் கயாடு லோஹர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் என இரு நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்ததாக கூறப்படுகிறது. அதில் நடிகை பாக்யஸ்ரீ போஸ்ற் இப்படத்தில் நடித்தற்கு ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் LIK பட முதல் நாள் வசூல்?.. ரசிகர்களுக்கு இயக்குநர் கொடுத்த எச்சரிக்கை!

அந்த வகையில் இப்படம் முற்றிலும் கிராமத்து ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகவுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் வெறும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி வெறும் 3 மாதத்தில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். மேலும் விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடக்கம் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.