அதிருப்தியில் விஜய்- அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு
Top Tamil News April 12, 2026 05:48 PM

சென்னை நுங்கம்பாக்கத்தில் வரும் 16ம் தேதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் ஹோட்டலில் வரும் 16ம் தேதி தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியில் வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் ஒத்துழைக்கவில்லை என்ற புகார் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில்  800 பேர் வரை பங்கேற்கவுள்ளனர். இறுதிகட்ட தேர்தல் பணிகள் பற்றியும் நிர்வாகிகளிடம் விஜய் விளக்கம் கேட்கவுள்ளார்.


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.