பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்... பிரதமர் மோடிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த CM ஸ்டாலின்!
Seithipunal Tamil April 15, 2026 03:48 AM

திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "50, 60களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டி இருக்கும்

இவன் என்ன மிரட்டுகிறான் என நினைக்காதீர்கள்; மிரட்டல் என நினைத்தாலும் எனக்கு கவலையில்லை
6 நான் உங்களை எச்சரிக்கிறேன்; தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும்  எச்சரிக்கை இது

தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான்; நாங்கள் சுயமரியாதைக்காரர்கள்; கொள்கை முக்கியம் தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றி சொல்லவே இந்த வீடியோ

ஏப்.16 இல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது; இல்லை, வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது

தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத் திருத்தத்தை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவுள்ளனர் தமிழ்நாட்டை பாதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் இருந்தால் சும்மா இருக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.