பிக் பாஸ் ஜூலி சென்னை மெரினாவில் கையில் ஒரு பதாகையுடன் திமுக-வுக்கு ஆதரவாகவும், விஜய்யின் தவெக-வுக்கு எதிராகவும் திடீர் பிரசாரத்தில் இறங்கி அதிரவைத்தார். “மெரினாவில் தொடங்கிய பயணம், மீண்டும் மெரினாவிலேயே” என்கிற பாணியில் அவர் செய்த இந்தச் செயல், அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அதிகாரிகளிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் ஜூலி இப்படிப் பொது இடத்தில் பிரசாரம் செய்தது சட்ட விதிமீறலாக மாறியுள்ளது. இதைக் கவனித்த ரோந்து போலீசார், ஜூலியைத் தடுத்து நிறுத்தி அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி களமிறங்கிய ஜூலியின் இந்த ‘மெரினா மூவ்’ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.