உங்களுக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரவில்லை என்றாலோ, அல்லது வெளியூரில் தங்கியிருப்பதாலோ கவலைப்பட தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை மைய இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்."Search in Electoral Roll" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு மூன்று வழிகளில் தேடுவதற்கான ஆப்ஷன்கள் தோன்றும்:
மேற்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுத்து, விவரங்களை உள்ளிட்ட பிறகு, திரையில் தோன்றும் Captcha எழுத்துகளை சரியாக டைப் செய்து, Search என்ற பட்டனை கிளிக் செய்யவும். ப்போது உங்களது பெயர், வயது, வாக்குச்சாவடி மையத்தின் பெயர் உள்ளிட்ட முழுமையான வாக்காளர் விவரங்கள் திரையில் தோன்றும். அதற்குக் கீழே உள்ள Action காலத்திற்கு நேராக இருக்கும் View Details என்பதை கிளிக் செய்தால், உங்களது முழுமையான வாக்காளர் தகவல் சீட்டு திறக்கப்படும். அந்த பக்கத்தின் கீழே இருக்கும் Print Voter Information என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் பூத் ஸ்லிப்பை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைலில் 'Voter Helpline' என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். செயலியை திறந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால் New Use' என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். ஆப்பின் முகப்பு பக்கத்தில் உள்ள Search Your Name in Electoral Roll என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதில் Search by Barcode, Search by Details அல்லது Search by EPIC No என்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை உள்ளிடுவது மிக சிறந்த மற்றும் விரைவான முறையாகும். விவரங்களை உள்ளிட்டு Search கொடுத்ததும், உங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப் திரையில் தோன்றும். திரையின் உள்ள Download ஐகானைக் கிளிக் செய்து, அதனை உங்கள் மொபைலில் சேமித்துக்கொள்ளலாம்.